Vishal, Suchitra
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஒருவழியாக ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் ரிலீஸ் ஆவதால் இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் ஒருபக்கம் சூடுபிடித்துள்ளது.
Vishal
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத கஜ ராஜா படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷால், கை நடுக்கத்தோடு தளதளத்த குரலில் பேசியது இணையத்தில் வைரல் ஆனது. விஷாலுக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அவருக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் கை நடுக்கத்தோடு பேசியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பாடகி சுசித்ரா, விஷாலின் இந்த நிலையை பார்த்து சந்தோஷப்படுவதாக பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... விஷால் மருத்துவமனையில் அனுமதியா? அவர் உடல்நிலை குறித்து மேலாளர் தகவல்!
Suchitra
விஷால் தன்னுடைய வீட்டுக்கு ஒயின் பாட்டிலோடு வந்த ஒரு சம்பவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். அதன்படி, சுசித்ரா, கார்த்திக் குமார் உடன் வாழ்ந்து வந்த சமயத்தில், ஒரு நாள் இரவு கார்த்திக் குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தாராம் சுசித்ரா, அப்போது வீட்டு வாசலில் விஷால் கையில் ஒயின் பாட்டில் உடன் வந்து நின்றுகொண்டிருந்தாராம். அப்போது விஷால் போதையில் இருப்பதை அறிந்த சுசித்ரா, அவர் உள்ளே வரவா என்று கேட்டதும், வேண்டாம் என சொல்லிவிட்டாராம். பின்னர் கையில் இருந்த ஒயின் பாட்டிலை கொடுக்க வந்ததாக சொன்னாராம் விஷால்.
Suchitra says about Vishal
கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து ஒயின் பாட்டில் கொடுத்ததால் வேண்டாம் என சொல்லி மறுத்த சுசித்ரா, கார்த்திக் குமார், கவுதம் மேனன் அலுவலகத்தில் இருப்பார் என்று சொல்லி அனுப்பி கெட்ட வார்த்தையில் திட்டினாராம். அப்போ விஷால் எதாச்சும் சொன்னீங்களா என கேட்டதற்கு, இல்லை ஒரு பூனை அடிக்கடி வந்து தொல்லை கொடுக்குது நீங்க போங்க என்று சொல்லி கதவை சாத்திவிட்டாராம் சுச்சி. இப்படிப்பட்ட விஷால், தற்போது குணமாக வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் அவர் கையில் மைக் பிடிக்க முடியாமல் நடுங்கியதை பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டதாக சுசித்ரா கூறி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படியுங்கள்... டைட்டில் கனவோடு இருந்தவரை மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற்றிய பிக் பாஸ்!