சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. பின்னர் ஹீரோயினாக நடிக்க துவங்கிய இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த நிலையில், இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், தன்னுடைய அக்கா கணவர் அஜித்தின் வழிகாட்டுதல் படி, ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கியதாக கூறப்பட்டது.