மலையாள திரையுலகின், முன்னணி நடிகரான ஜெயராம், தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். இவரை தொடர்ந்து... இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். கடைசியாக இவர், நடிகர் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்த 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து, மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்திலும் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார் என்பதை சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
முதல் பாகத்தில், ஜெயராம் மற்றும் கார்த்தியின் காம்பினேஷன் சீன்கள்... மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. எனவே இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க கூடிய ஒன்றாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாக இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், படம் வெற்றிபெறவும்... சித்திரை மாதத்தை முன்னிட்டும் நடிகர் ஜெயராம் தன்னுடைய மனைவி, பார்வதியுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.