தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன் முக கலைஞராக இருக்கும்... டி.ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிலம்பரசன்.
இதை தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக. மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், என சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அப்பா 8 அடி பாய்ந்தால்... பிள்ளை 18 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தனது தந்தையைப் போல் பல திறமைகளை கொண்டவாராக திரையுலகில் அசத்தி வருகிறார் சிம்பு.
மேலும் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத வகையில், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, மாநாடு, வெந்துதணிந்தது காடு போன்ற படங்களிலும் நடித்தார்.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர், தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சிம்பு, இதை தொடர்ந்து நடித்த வெந்து தணிந்தது காடு, மற்றும் பத்து தல ஆகிய படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தது.
இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று தனது வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் தளபதி விஜய் ஸ்டைலில் ரசிகர்க மன்ற நிர்வாகிகளுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். சிம்பு ரசிகர் மன்றமாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களும். ரசிகர்களுக்கு தன்னுடைய கைகளாலேயே பிரியாணி விருந்து வைத்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.