லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஒருபுறம் திரைப்படங்கள் நடிப்பது, பட தயாரிப்பு, பிசினஸ் என பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாலும், மற்றொருபுறம்... குழந்தைகள் மற்றும் கணவரோடு நேரம் செலவிடவும் முக்கிய கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழவும் நேரம் ஒதுக்க தவறியதே இல்லை.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து ஜம்முனு உள்ளார். அதேபோல் நயன்தாரா வெள்ளை நிற கேரள புடவையில், தலையில் மல்லிகை பூ, நெற்றியில் பொட்டு என குடும்ப குத்து விளக்காக கும்முனு ஜொலிக்கிறார். ஆனால் தங்களின் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இருவருமே பதிவிடவில்லை. விரைவில் இது குறித்த புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தான், நயன் - விக்கி ஜோடி தங்களுடைய மகன்களான உயிர் மற்றும் உலக்கின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுவே அவரது முதல் ஹிந்தி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.