நடிகர் அஜித், கார் ரேஸில் பங்கேற்பதற்காக மிக குறுகிய காலத்தில், 25 கிலோ வரை உடல் எடையை குறைத்ததன் ரகசியம் குறித்து, தற்போது 'பிஸ்மி' தன்னுடைய வலைப்பேச்சு தளத்தில் கூறியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகர் அஜித் துபாயில் நடக்க உள்ள, 24 மணிநேர கார் ரேசில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். 24 மணிநேரம் நடக்கும் இந்த போட்டியில், அதிக தூரத்தை கடக்கும் அணிதான் வெற்றி பெரும். இதற்கான பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் அஜித், நேற்று கொடுத்த பேட்டி, பட்டி தொட்டி எங்கும் வைரலானது. அப்போது அவர் கூறுகையில், "கார் ரேஸில் 18 வயதில் இருந்தே, ஆர்வம் காட்டி வருகிறேன். 2002 ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் இறங்கினேன். 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில், கார் ரேஸில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்கள் காரணமாக சில வருடங்களாக கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார். பல வருடங்களுக்கு பின்னர், மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித், இன்னும் ஒன்பது மாதங்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் முழுக்க.. முழுக்க.. கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தார்.