கைப்புள்ள உஷாராதாம்பா இருக்காரு! அஜித் - விஜய் குறித்த கேள்விக்கு ரிபீட் மோடில் தெறிக்கவிட்ட வடிவேலு!

First Published | Jan 11, 2025, 12:39 PM IST

விஜயின் அரசில் மற்றும் அஜித்தின் கார் ரேஸ் குறித்து, நடிகர் வடிவேலுவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, மிகவும் உஷாராக மனுஷன் பதில் கூறியுள்ளார். அப்படி என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்.
 

Comedy actor Vadivelu

மதுரையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு விஜய் மற்றும் அஜித் குறித்த கேள்விகளுக்கு ரிப்பீட் மோடில் மிகவும் உஷாராக பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் பெற்ற காமெடி நடிகர்கள் ஒரு சிலரில் வடிவேலுவும் ஒருவர். இவரின் காமெடியக்காகவே படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏராளம். வார்த்தையால் மட்டும் காமெடி பண்ணாமல், உடல் மொழியாலும் நடித்து உச்சம் தொட்டவர். ரசிகர்களை சிரிக்க வைக்க, கீழே... விழுந்து... பிரண்டு காமெடி செய்வதில் வல்லவர். சமீப காலமாக இவர் நடித்த காமெடி படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், 'மாமன்னன்' படத்தில் எமோஷ்னல் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

Vadivelu Latest Speech

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இவரிடம் பத்திரிகையாளர்கள் "இதுவரை சினிமாவில் நடித்து வந்த, நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டார், அவருடைய இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா? என கேட்டதற்கு,  வடிவேலு சற்றும் யோசிக்காமல் வேறு ஏதாவது பேசுவோமா என தவிர்த்தார். இதைத்தொடர்ந்து அஜித்தின் கார் ரேஸ் குறித்த கேள்விக்கும், மீண்டும் ரிப்பீட் மோடில் வேற ஏதாவது பேசுவோமா என கூறினார்.

என் வெற்றிக்கு காரணம் இது தான்! 2 விட்டுக்கொடுக்க கூடாத விஷயங்கள்; பெண்களை ஊக்கப்படுத்திய நயன்தாரா!
 

Tap to resize

Vadivelu Upcoming Movies

பின்னர், தற்போது நடித்து வரும் படங்கள் குறித்து பேசிய வடிவேலு, சுந்தர் சி-யுடன் நடித்து வரும் 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளதாகவும்,  பகத் பாசிலுடன் இணைந்து 'மாரிசன்' என்ற படத்தில் நடித்துள்ளதாக கூறினார்.  இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும், இதைத்தொடர்ந்து பிரபுதேவாவும் தானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது என கூறினார்.

Vadivelu 3 modulation comedies

தமிழ் சினிமாவில் முன்பு போல் காமெடி படங்களுக்கு வரவேற்பு குறைந்து விட்டதே? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் மொத்தம் மூன்று பரிமாணங்களில் நடித்தேன். ட்ராக் பண்ணுவேன், தனியார் கேங்குடன் இணைந்து காமெடி செய்வேன். அதே போல் ஹீரோவுடன் பயணிக்கும் கதாபாத்திரங்களில் நடித்தேன். ஆனால் இப்போது அது போன்ற காமெடிகள் குறைந்து விட்டதாக தெரிவித்தார். தற்போது, சுந்தர் சி-யுடன் நடித்துள்ள 'கேங்கர்ஸ்' ஹீரோவுடன் பணிக்கும் கதை என்றும், அனைவரும் பார்த்து, ரசித்து, சிரித்து மகிழும் படம் என கூறியுள்ளார்.

அந்த 3 பேருக்கு தகுதியே இல்லையா? பிக்பாஸ் டாப் 5 போட்டியாளர்களை அறிவித்த விசித்ரா!
 

Vadivelu about Vijay and Ajith

வடிவேலு மதுரையை சேர்ந்தவர் என்பதால், 'உங்களுக்கு ஜல்லிக்கட்டில் மாடு பிடித்த அனுபவம் இருக்கா? என கேட்டதற்கு... நான் மாட்டை பார்த்து ஓடி இருக்கேன். மாட்டை புடிச்சா அனுபவம் எல்லாம் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் மாட்டை கொஞ்சம் கண்ட்ரோல் ஆக தான் விடுகிறார்கள். அப்போதெல்லாம் இங்குட்டு ஒருத்தர் பேசிக்கொண்டிருந்தால், மாடு குத்தி தூக்கிட்டு போய்கிட்டே இருக்கும் என கலகலப்பாக பேசினார். இப்போ கண்ட்ரோல் ஓட போய்கிட்டு இருக்கு ஜல்லிக்கட்டு, ரொம்ப சிறப்பா பெரிய லெவெலில் போய்க்கிட்டு இருக்கு என்றவர், அரசு ஏழைகள் பாதிக்காத வகையில் வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!