Nayanthara Speech
தென்னிந்திய திரை உலகில், முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பை தவிர தயாரிப்பாளர் மற்றும் பிஸ்னஸ் வுமனாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு துவங்கிய நிறுவனம் தான் பெமி 9 என்கிற நாப்கின் நிறுவனம். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மதுரையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட நயன்தாரா, விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கு சில ஆலோசனை வழங்கியதோடு... அதில் பங்கேற்று விற்பனை அதிகரிக்க ஊன்றுகோலாக இருந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
These 2 reasons for Nayanthara Success
அப்போது நயன்தாரா தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்தும், 2 விட்டுக் கொடுக்க கூடாத விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளார். இவருடைய பேச்சு தான் தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நயன்தாரா பேசும்போது, நான் எப்போதும் என்னுடைய வாழ்க்கையில் நம்பும் 2 விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று தன்னம்பிக்கை மற்றொன்று சுயமரியாதை. இது இருந்தால் நம்மை யார் கீழே இறக்க வேண்டும் என நினைத்தாலும், நாம் முன்னேறிக்கொண்டே செல்வோம்.
கமலா காமேஷுக்கு என்ன ஆச்சு? மரண செய்தியால் கிளம்பிய பீதி - உண்மையை உடைத்த உமா ரியாஸ்!
Femi 9 First Year Celebration in Madurai
தன்னம்பிக்கை நமக்குள் வளர நாம் நேர்மையாக உழைக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் எவ்வளவு கீழ் தனமாக பேசினாலும், தவறாக நடந்து கொண்டாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் உண்மையாக நீங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்போதுதான் ஒருவருக்குள் தன்னம்பிக்கை வளரும். இது உங்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா மட்டும் இன்றி அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Nayanthara inspires Speech for women
நயன்தாரா நடத்தி வரும் பெமி 9 நாப்கின் நிறுவனத்தில் பெண்கள் தான் அதிகமானோர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே நயன்தாரா இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு சுமார் 8 படங்களில் நடித்து வருகிறார்.
'வணங்கான்' மூலம் பாலா - அருண் விஜய்க்கு வெற்றி கொடுத்தாரா? முதல் நாள் வசூல் விவரம்!
Nayanthara Upcoming Movies
எப்படியும் இந்த ஆண்டு நயன்தாரா நடிக்கும் 5 படங்களாவது வெளியாகும் என கூறப்படுவதால், இந்த ஆண்டு நயன்தாராவின் ஆண்டாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக நயன்தாரா நடித்து முடித்துள்ள, டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதால், அடுத்தடுத்து இந்த படங்களில் ரிலீஸ் தேதி வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.