Sriya Surendran Engagement
விஜய் டிவி தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் திருமண செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் வசந்த் மற்றும் 'பொன்னி' சீரியல் நடிகை வைஷ்ணவிக்கு திருமணம் நடந்தது.
VJ Sriya Surendran
இவர்களை தொடர்ந்து, தற்போது மற்றொரு சின்னத்திரை நடிகையான ஸ்ரேயாவுக்கு காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Chellamma Serial actress Sriya Surendran
ஸ்ரேயா சுரேந்தரன், சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். இதன் பின்னர் செல்லமா சீரியலில் இருந்து திவ்யா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஸ்ரேயா நடித்தார். நிச்சயதார்த்தமே மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.