சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருபவர், தன்னுடைய உடல் பயிற்சி வீடியோக்கள், மகன்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வெளியே செல்லும் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது, மேலும் சிலர் தனுஷுக்கு போட்டியாக ஐஸ்வர்யா இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக...ஆடி வெள்ளி... எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளுடன் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா - தனுஷ் ஆகிய இருவருமே... அதிகார பூர்வமாக பிரிய போவதாக அறிவித்த பின்னர், மீண்டும் சமாதானம் ஆகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இவருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக கூறவில்லை என்பது குறிபிடத்தக்கது.