தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தான் எதிர்கொண்ட காஸ்டிங் கெளச் பிரச்சனைகள் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்துள்ளார். பொதுவாக தனது சினிமா வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியான அனுபவங்களையே பகிர்ந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் தனது இளம் வயதில் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
24
ஜஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த ஷாக் தகவல்
அவர் பேசியதாவது : ''நான் மிகவும் இளமையாக இருந்தேன். என் சகோதரனுடன் சென்றிருந்தேன். போட்டோகிராபர் என் சகோதரனை வெளியே உட்கார வைத்தார். என்னை உள்ளே அழைத்து இந்த உள்ளாடை அணிந்து வா எனக் கொடுத்தார். பிறகு, 'நான் உன் உடலைப் பார்க்க வேண்டும்' என்றார்'' ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மோசமான அனுபவத்தை வெளிப்படுத்தினார். அந்த வயதில் சினிமா துறை எப்படி இயங்குகிறது என்று எனக்கு தெரியாது.
34
அண்ணனிடம் சொன்னதில்லை
இங்கு இப்படித்தான் விஷயங்கள் நடக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அதில் ஏதோ சந்தேகம் வந்தது. அந்த உடையை அணிய என் சகோதரனின் அனுமதி வேண்டும் என்று கூறினேன். அறையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எத்தனை பெண்களிடம் அவர் இப்படிச் செய்திருப்பார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தை என் சகோதரனிடம் நான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெளிவுபடுத்தினார்.
ஒருமுறை ஒரு இயக்குநர் தன்னிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்தினார். நான் சில நிமிடங்கள் தாமதமாக வந்தேன். ஆனால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் முன்னிலையில் என்னை திட்டினார். திட்டியது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியதுதான் பிரச்சனை. நான் ஒரு தவறு செய்தால்கூட, பொது இடத்தில் ஒருவரைக் கண்டிப்பது சரியா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுள்ளார். ஆனால், அந்த போட்டோகிராபர் மற்றும் இயக்குநரின் பெயரை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிடவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.