ஆஸ்கர் எஃபெக்ட்... உலகளவில் கூகுளில் வெறித்தனமாக தேடப்பட்ட நாட்டு நாட்டு பாடல் - அதுக்குன்னு இப்படியா?

First Published Mar 15, 2023, 1:04 PM IST

ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டு நாட்டுப் பாடலை கூகுளில் வழக்கத்தைவிட அதிகளவில் தேடியது தெரியவந்துள்ளது.

ராஜமௌலி யுகத்தில் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஆர் ஆர் ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக நடித்திருந்த இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட்டாகின. குறிப்பாக ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கால பைரவா மற்றும் ராகுல் இணைந்து பாடிய நாட்டு நாட்டு என்கிற குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

முதலில் கோல்டன் குளோப் விருதை வென்ற இப்பாடல் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவிலும் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் விருது வென்று அசத்தியது. இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பாடல் என்கிற பெருமையும் நாட்டு நாட்டு நாட்டு பாடல் பெற்றது.  ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து இப்பாடல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்த ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ பட யானை - பலரும் அறிந்திடாத தகவல்

அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டு நாட்டுப் பாடலை கூகுளில் வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகமாக தேடி உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஆஸ்கர் அறிவிப்புக்கு பின்னர் சுமார் 1,105 சதவீதம் இதன் தேடுதல் அதிகரித்துள்ளதாம். அதுமட்டுமின்றி டிக்டாக்கிலும் இந்த பாடலை கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனதில் இருந்து தற்போது வரை 52.6 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இப்படி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்துக்கள் ஒருபக்கம் குவிந்து வந்தாலும், மறுபக்கம் ஆஸ்கர் விருதை வெல்ல இந்த பாடல் சுத்தமாக தகுதி இல்லாத ஒன்று என்றும், ஆர்.ஆர்.ஆர் படக்குழு கோடிக்கணக்கில் காசு கொடுத்து தான் இந்த விருதை வாங்கி இருப்பதாகவும் அடுக்கடுக்கான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... கண்ணை நம்பாதே முதல் வாத்தி வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ

click me!