இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அடுத்ததாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது.
அந்த வகையில் விஜய்யும், அட்லீயும் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய படம் தான் தெறி, தாணு தயாரித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. அட்லீயுடன் பணியாற்றும் அனுபவம் பிடித்துப் போனதால், அடுத்தடுத்து தனது மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜய். இந்த இரண்டு படங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு இந்த கூட்டணிக்கு ஹாட்ரிக் ஹிட்டையும் கொடுத்தது.
இதையும் படியுங்கள்... ‘சாக்லேட் பாய்’னா சும்மாவா.. ஹரீஷ் கல்யாண் திருமணத்தில் குவிந்த ஹீரோயின்ஸ்- யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
தமிழில் அடுத்தடுத்து நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீக்கு அடுத்ததாக கிடைத்தது தான் ஜாக்பாட் வாய்ப்பு. முன்னணி இயக்குனர்கள் பலர் பணியாற்ற துடிக்கும் நடிகர்களுள் ஒருவரான ஷாருக்கான், தனது தயாரிப்பிலேயே ஒரு படத்தை இயக்க அட்லீக்கு வாய்ப்பளித்தார். அந்த படம் தான் தற்போது ஜவான் என்கிற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட ஏராளமான பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.
இன்னும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கே முடிவடையாத நிலையில், தற்போது அட்லீக்கு மேலும் ஒரு பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அந்த வகையில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான் கான், தனது அடுத்த பட வாய்ப்பை அட்லீக்கு கொடுக்கும் முனைப்பில் இருக்கிறாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சக்சஸ் ஆனால் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Abhirami Venkatachalam : வேற லெவலில் சூப்பர் மாடல் போஸ் கொடுத்த அபிராமி வெங்கடாசலம்