குறிப்பாக ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்ஸும், அவரின் நெருங்கிய தோழிகள் சிலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
68
அந்த வகையில் நடிகைகள் அதுல்யா ரவி, இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நேரில் வந்து ஹரீஷ் கல்யாணை வாழ்த்தினர்.
78
இதில் அதுல்யா, ஹரீஷ் கல்யாணுடன் டீசல் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார். அதேபோல் பிந்து மாதவியும், இந்துஜாவும் ஹரீஷின் நெருங்கிய தோழிகள் ஆவர்.
88
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தான் ஹரீஷ் கல்யாணும், பிந்து மாதவியும் நண்பர்களாகினர். அந்நிகழ்ச்சி முடிந்து 5 ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்களது நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.