பொங்கல் ரேஸில் இணைந்த அஜித்... ‘வாரிசு’க்கு எதிராக ‘துணிவு’டன் களமிறங்கும் உதயநிதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

First Published | Oct 28, 2022, 1:25 PM IST

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.

பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின. தீபாவளியை அடுத்து தமிழர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை என்றால் அது பொங்கல் தான்.

அத்தகைய பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் தான் முதன்முதலில் பொங்கல் ரேஸில் இணைந்தது. இதையடுத்து பிரபாஸ் நடிக்க உள்ள ஆதிபுருஷ் திரைப்படம் பொங்கலுக்கு திரைகாண உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

Tap to resize

இந்நிலையில், தற்போது அந்த பட்டியலில் மூன்றாவதாக இணைந்துள்ள படம் துணிவு. அஜித் நடித்துள்ள இப்படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த படக்குழு தற்போது பொங்கலுக்கு விருந்தாக திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதன்மூலம் 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த பொங்கல் ரேஸில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அடுத்த அதிரடிக்கு தயாரான கமல் - லோகேஷ் கூட்டணி! பிரம்மாண்டமாக நடக்கும் விக்ரம் 100-வது நாள் விழா - முழு விவரம்

Latest Videos

click me!