நடிகர் சத்யராஜ், திராவிடத்தின் மீது அதிக பற்று கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி அவரும் அவர், பல்வேறு மேடைகளில் தனக்கு பெரியார் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி, இவர் கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். சத்யராஜ் - மகேஸ்வரி ஜோடிக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.
24
Divya Sathyaraj Joined DMK
ஊட்டச்சத்து நிபுணராக இருந்தாலும் திவ்யாவுக்கு அரசியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக அவருக்கு தேசிய கட்சிகளில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. ஆனால் அதையெல்லாம் நிராகரித்த திவ்யா சத்யராஜ், அண்மையில் திமுகவில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் திவ்யா சத்யராஜ்.
சத்யராஜ் மகள் திமுகவின் இணைந்த சில தினங்களில் அவரது மகன் சிபிராஜ், தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அவர் தனது ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தான் என ஓப்பனாக அறிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் விஜய் தவெக கட்சி கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இதனால் சத்யராஜ் வீட்டில் அரசியல் களைகட்டி இருக்கிறது.
44
Sathyaraj
நேற்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு களத்திற்கு வந்த நடிகர் விஜய், அப்பகுதி மக்களை சந்தித்து, விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக குரல் கொடுத்ததோடு, மத்திய மாநில அரசுகளையும் சாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அக்கட்சிக்கான தனது ஆதரவை சிபிராஜ் தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரே குடும்பத்தினர் இரண்டு கட்சிகளில் இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதன்மூலம் தேர்தல் நேரத்தில் சத்யராஜ் வீடு களைகட்டும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.