மதகஜராஜா வெற்றியால் துருவ நட்சத்திரத்திற்கு கிடைத்த கிரீன் சிக்னல்! எப்போ ரிலீஸ்?

First Published | Jan 21, 2025, 2:04 PM IST

மதகஜராஜா படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம்.

Unreleased Tamil Movies

தமிழ் சினிமாவில் பல வருடம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த திரைப்படம் தான் மதகஜராஜா. கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சுமார் 12 வருட காத்திருப்புக்கு பின்னர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. பழைய படத்திற்கு என்ன வரவேற்பு இருக்கப்போகிறது என்று புதுப்படங்கள் எண்ணி இருந்த வேளையில், தனக்கு போட்டியாக வந்த அனைத்து புதுப்படங்களையும் வசூலில் தூக்கி சாப்பிட்டது மதகஜராஜா.

Tirupur Subramaniam

இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் அதிக வசூல் செய்த படம் மதகஜராஜா தான். அப்படத்தின் வெற்றியால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா திடீரென இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனதற்கு விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் தான் காரணம். அவர் தான் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து பணிகளையும் அவர் தான் மேற்கொண்டார். அவரின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்...மதகஜராஜா வெற்றிக்கு பின் எகிறிய மார்க்கெட்; சுந்தர் சி கைவசம் இத்தனை படங்களா?


Dhruva Natchathiram Release

மதகஜராஜாவின் வெற்றியால் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள மற்ற படங்களுக்கும் ஒரு கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. மதகஜராஜாவை வெளியிட உதவிய திருப்பூர் சுப்ரமணியம், அடுத்ததாக துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் வேலைகளை வருகிற ஜனவரி 26ந் தேதிக்கு பின்னர் தொடங்க உள்ளதாக கூறி இருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கிடப்பில் போடப்பட்ட 10 படங்களை இந்த ஆண்டில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Shelved Movies in Tamil Cinema

அந்த படங்களால் கோடிக்கணக்கான பணம் முடங்கிக் கிடப்பதாகவும், அதை ரிலீஸ் செய்தால் தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் கூறி இருக்கிறார். இதன்மூலம் கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி, கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன், அரவிந்த் சாமி நடித்த சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு ஆப்பு வைக்க ரெடியான சந்தானம்; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest Videos

click me!