இது சாமி விஷயம், முன்னோர்களுக்கு முன்பு உருவானது: கையில் கட்டிய கயிறு பத்தி பேசிய யோகி பாபு!

Published : Jan 21, 2025, 01:09 PM IST

Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret : நாளுக்கு நாள் கையில் கயிறு கூடிக் கொண்டே போகிறது என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு யோகி பாபு நச்சென்று பதிலளித்துள்ளார்.

PREV
15
இது சாமி விஷயம், முன்னோர்களுக்கு முன்பு உருவானது: கையில் கட்டிய கயிறு பத்தி பேசிய யோகி பாபு!
Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret

Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret : தமிழ் சினிமாவில் முன்னணி காமெட் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், சூர்யா, ரவி மோகன், விஜய் சேதுபதி, ஷாருக் கான் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகரையும் தாண்டி ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோக்களை விட அதிக படங்களில் நடித்து வருகிறார். உருவ கேலிக்கு மத்தியில் சினிமாவில் சாதித்து காட்டி வருகிறார்.

25
Comedy Actor Yogi Babu

ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு யோகி பாபுவை பக்தி மையமாக தான் பார்க்க முடியும். அதோடு கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதோடு சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

35
Yogi Babu Filmography

இதே போன்று திருச்செந்தூர், திருத்தணி என்று பல கோயில்களுக்கு சென்று வந்துள்ளார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகி பாபு தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் முன்னதாகவும், படத்திற்கு பின்னும் கோயிலில் வழிபாடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதோடு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருப்பார். ஆனால், படங்களில் அப்படி அவரது கையில் எதுவுமே இருக்காது. எனினும் ஒரு சில படங்களில் அப்படியே நடித்திருப்பார்.

45
Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret

பொதுவாகவே ஆன்மீக பற்று கொண்டவர்கள் திருஷ்டி விழாமல் இருக்க கையில், கழுத்தில், காலில் கருப்பு நிற கயிறு கட்டுவார்கள். இது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் தான். இந்தப் பழக்கம் இன்றைய இளைஞர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சிலர் பச்சை, சிகப்பு, மஞ்சள் என்று பல நிறங்களில் இருக்கும் கயிறுகளை தங்களது கையில் கட்டிக் கொள்வார்கள்.

55
Yogi Babu Temple Visit

அப்படித்தான் யோகி பாபுவும் தன்னுடைய கையில் நிறைய கயிறுகளை கட்டியிருக்கிறார். இது குறித்து அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், நாளுக்கு நாள் உங்களது கையில் கயிறு அதிகமாக காரணம் என்ன என்பது போன்ற ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த யோகி பாபு இது சாமி விஷயம். மேலும், இது சம்மந்தமில்லாத கேள்வி. நீ இல்ல, நான் இல்ல நம் முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது. இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நச்சென்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories