சூர்யாவுக்கு ஆப்பு வைக்க ரெடியான சந்தானம்; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published | Jan 21, 2025, 12:02 PM IST

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

DD Next Level

சந்தானம் ஹீரோவான பின்னர் அவர் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படம் என்றால் அது தில்லுக்கு துட்டு தான். காமெடி கலந்த திகில் திரைப்படமான இதன் முதல் பாகம் 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் செய்தனர். இந்த இரண்டு படங்களையும் ராம்பாலா இயக்கி இருந்தார். இப்படங்கள் வசூல் ரீதியாகவும் மாபெரும்  வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

DD Returns

தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் டிடி ரிட்டர்ன்ஸ் என்கிற பெயரில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தை புதுமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இதையடுத்து தில்லுக்கு துட்டு படத்தின் நான்காம் பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தையும் பிரேம் ஆனந்த் தான் இயக்கி இருக்கிறார். இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட்


DD Next Level Movie

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கீதிகா நடித்துள்ளார். மேலும் இயக்குனர்கள் கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன், நடிகைகள் யாஷிகா ஆன்ந்த், கஸ்தூரி, நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன், மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒஃப்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஷோ பீப்புள் மற்றும் நிஹாரிகா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

DD Next Level Release Date

இந்நிலையில், சந்தனாத்தின் பிறந்தநாளான இன்று டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் சோபாவில் கெத்தாக அமர்ந்திருக்கும் சந்தானம் காலுக்கு அடியில் மண்டை ஓடும், கையில் சப்போர்ட்டுக்கு எலும்புக்கூடையும் வைத்திருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படமும் மே 1ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்கு போட்டியாக டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... காமெடியால் கல்லாகட்டியவர்; நடிகர் சந்தானம் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

Latest Videos

click me!