பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டிராபி வென்ற பின் முத்துக்குமரன் வீடியோ வெளியிட்டு சொன்ன விஷயம் என்ன?

First Published | Jan 21, 2025, 11:19 AM IST

Bigg Boss Tamil Season 8 Title Winner Muthukumaran Released First Video : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் வெளியில் வந்த பிறகு முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Muthukumaran win bigg boss tamil season 8 trophy, Runner up, Prize Money,

Bigg Boss Tamil Season 8 Title Winner Muthukumaran Released First Video : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது 105 நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்காத நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு ரயான், முத்துக்குமரன், விஷால், பவித்ரா மற்றும் சௌந்தர்யா என்று 5 போட்டியாளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

Bigg Boss Tamil Season 8 Title Winner Muthukumaran Released First Video

டைட்டில் வின்னரை தேர்வு செய்யும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே 19ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சின் போது ரயான், பவித்ரா மற்றும் விஷா என்று கடையில் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருவரில் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று தொகுப்பாளரான விஜய் சேதுபதி அறிவித்தார்.


Bigg Boss Tamil Season 8 Title Winner Muthukumaran

அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான டிராபியும், 40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பரீட்சையமான முத்துக்குமரன் இன்று உலகம் முழுவதும் வாழும் அத்தனை தமிழ் ரசிகர்கள் அறிந்த ஒரு போட்டியாளராக ஜெயித்து காட்டியுள்ளார்.

Bigg Boss Tamil Season 8 Title Winner

இந்த நிலையில் தான் பிக் பாஸ் முடிந்த நிலையில் வீட்டிற்கு சென்ற டைட்டில் வின்னர் முத்துக்குமரன் முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள், வெளியில் உங்களுக்கு அன்பு அதிகமாக இருக்கிறது என்று. அப்போது அதைப் பற்றி தெரியவில்லை. வெளியில் வந்து பார்த்த பிறகு தான் வியப்பாக இருக்கிறது. என்னுடைய உழைப்பிற்கு இவ்வளவு அன்பு கிடக்குமா என்பதை பார்க்கும் போது எனக்கு வியப்பாக தோன்றுகிறது.

Bigg Boss Tamil Season 8 Title Winner Muthukumaran

உங்களது அன்பை நான் நானாக இருந்து, நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்து காப்பாற்றிக் கொள்வேன் என்று உழைப்பின் மீது சத்தியம் செய்துள்ளார். இவருக்கு காமெடி நடிகர் தங்கதுரை, முத்துக்குமரா நீ முத்தமிழ் குமரன்…பிக்பாஸ் வெற்றி குமரன்..என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!