அஜித் பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு; குட் பேட் அக்லிக்கு வந்த புது சிக்கல்?

Published : Jan 21, 2025, 11:08 AM IST

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

PREV
14
அஜித் பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு; குட் பேட் அக்லிக்கு வந்த புது சிக்கல்?
Good Bad Ugly

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ.160 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

24
Ajiths Good Bad Ugly

குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தை தயாரித்துள்ள மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை அதிரடியாக உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு; கேம் சேஞ்சர் தான் காரணமா?

34
Mythri Movie Makers

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படம் உலகளவில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அண்மையில் இப்படம் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதால், அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

44
IT Raid

புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடி வசூல் ஈட்டியதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் அடிப்படையில் தான் தற்போது அதன் அலுவலகங்களில் ஐடி ரெய்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறதாம். இதில் வரி ஏய்ப்பு செய்தது ஏதேனும் உறுதி ஆனால், அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் மட்டுமின்றி கேம் சேஞ்சர் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களிலும் ஐடி ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... போர்ச்சுக்கல் கார் ரேஸில் கலக்கும் அஜித் – முதல் சுற்றிலேயே அசத்தல்!

click me!

Recommended Stories