அர்ச்சனாவுக்கு பரிசை அள்ளி கொடுத்த பிக் பாஸ்; முத்துக்குமரனுக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?

Published : Jan 21, 2025, 01:03 PM IST

பிக் பாஸ் சீசன் 7-ல் டைட்டில் வென்ற அர்ச்சனாவை விட, சீசன் 8 டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு கம்மியான பரிசுகள் வழங்கப்பட்டதன் பின்னணியை பார்க்கலாம்.

PREV
15
அர்ச்சனாவுக்கு பரிசை அள்ளி கொடுத்த பிக் பாஸ்; முத்துக்குமரனுக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?
Archana, Muthukumaran

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அண்மையில் நடந்து முடிந்த 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த சீசன் ஆரம்பத்தில் உப்பு சப்பு இல்லாமல் சென்றாலும், போக போக பிக் அப் ஆகி, இறுதியில் எமோஷனல் தருணங்களுடன் நிறைவு பெற்றது. டாஸ்கிக் இல்லாத சீசன் என்கிற பெருமையையும் சீசன் 8 பெற்றுள்ளது.

25
Bigg Boss Title Winner Muthukumaran

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். வழக்கமாக கடந்த 7 சீசன்களாக டைட்டில் வின்னர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் சீசன் 8-ல் டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள தொகையை பணப்பெட்டி டாஸ்கில் வென்றல் விஷால், பவித்ரா, ரயானுக்கு பிரித்து கொடுத்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டிராபி வென்ற பின் முத்துக்குமரன் வீடியோ வெளியிட்டு சொன்ன விஷயம் என்ன?

35
VJ archana

இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் பணப்பெட்டி தனியாக வைக்கப்பட்டு அதில் வெல்லும் பணம் டைட்டில் வின்னரின் பரிசுத் தொகையில் இருந்து கழிக்கப்படாமல் கொடுக்கப்படும். அப்படி தான் கடந்த சீசனில் பூர்ணிமா 16 லட்சத்துக்கான பணப்பெட்டி உடன் வெளியேறினார். பிக் பாஸ் வரலாற்றில் பணப்பெட்டியில் அதிக தொகையை எடுத்த போட்டியாளரும் அவர் தான். அதுமட்டுமின்றி கடந்த சீசனில் டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

45
Muthukumaran with Bigg Boss Trophy

ரூ.50 லட்சத்தோடு ரூ.15 லட்சத்துக்கான வீட்டுமனை மற்றும் சொகுசு கார் ஒன்றும் அர்ச்சனாவுக்கு வழங்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு பைனலிஸ்டுக்கும் இவ்வளவு பரிசுகள் கிடைத்ததில்லை. ஆனால் அண்மையில் முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே கம்மியான பரிசுத் தொகையை பெற்றவர் முத்துக்குமரன் தான்.

55
Muthukumaran

பிக் பாஸ் டீம் டைட்டில் வின்னரின் பணத்திலேயே கைவைக்க முக்கிய காரணம், இந்த சீசனுக்கு பெரியளவில் டிஆர்பி கிடைக்கவில்லையாம். அதுமட்டுமின்றி கமல்ஹாசனை காட்டிலும் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது ஸ்பான்சர்களும் கம்மியானதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே டைட்டில் வின்னரின் பரிசுத் தொகையை பணப்பெட்டி டாஸ்கில் பயன்படுத்தி சமாளிபிகேஷன் பண்ணி இருக்கிறது பிக்பாஸ் குழு. 

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் முடிந்ததும் முதல் வேலையாக காதலை பிரேக் அப் பண்ணிய அன்ஷிதா!

click me!

Recommended Stories