Ravi Mohan, Kadhalikka Neramillai
Ravi Mohan Says That I will go to the Himalayas and settle down : தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக டிரெண்டிங்கில் இருப்பவர் தான் ரவி மோகன். விவாகரத்து, பெயர் மாற்றம், அடுத்தடுத்து தோல்வி, தொடர்ந்து பேட்டி என்று டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். ஜெயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரவி மோகன். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் இந்தப் படத்தில் ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பு கொடுக்கவே ஜெயம் ரவி என்றே சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் அழைக்கப்பட்டு வந்தார். 22 ஆண்டுகாலமாக ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார்.
Ravi Mohan Failure Movies, Jayam Ravi
ஆனால், அடுத்தடுத்து தோல்வி, மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு ஆகியவற்றின் காரணமாக தனது ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவி மோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
Ravi Mohan Upcoming Movies
சமரச பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் நீதிமன்றம் சென்று வருகின்றனர். சில சமயங்களில் காணொளி மூலமாக ஆஜராகினர். இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த பிரதர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் போதுமான வரவேற்பு பெறவில்லை.
Ravi Mohan - I will go to the Himalayas and settle down
இந்தப் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷால் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. ஆனால், இந்தப் படமும் தியேட்டரில் காத்து வாங்கவே வசூலில் பெரியளவில் குவிக்கவில்லை. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி 34, எஸ்கே 25, ஜெனி மற்றும் தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் உடன் நடந்த நேர்காணலில் சினிமாவை விட்டுவிட்டு எங்க போவீங்க? ஏற்கனவே விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். அஜித்தும் கார் ரேஸூக்கு சென்றுவிட்டார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Ravi Mohan Filmography
இதற்கு பதிலளித்த ரவி மோகன் கூலாக, எனக்கு என்று எந்த ஆசையும் இல்லை. நான் இமயமலைக்கு சென்று செட்டிலாகிவிடுவேன் என்று விரக்தியோடு பேசியிருக்கிறார். இதற்கு அவரோட விவாகரத்து மற்றும் படங்களின் தோல்வி தான் காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு படம் தோல்வி அடைந்தால் ஒரு படம் ஹிட் கொடுக்கும். அதற்காக இப்படியெல்லாம் முடிவு எடுக்க கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.