ரூ.100 கோடிக்கு மேல் வசூல்..திருப்புமுனை தந்த திருச்சிற்றம்பலம்- ஹாட்ரிக் தோல்விக்கு பின் தனுஷ் மீண்டுவந்த கதை

First Published Sep 23, 2022, 11:07 AM IST

Thiruchitrambalam : திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமின்றி தனுஷுக்கு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது.

தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நடிகர் தனுஷ், தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் விஸ்வரூப வெற்றி கண்டு, இன்று தமிழ்சினிமாவின் தலைசிறந்த நடிகராக உயர்ந்துள்ளார். இவர் ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். இந்த இரண்டு படங்களுமே வெற்றிமாறன் இயக்கியவை.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு ரிலீசான கர்ணன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து அவரது சினிமா கெரியர் கடும் சரிவை சந்தித்தது. அதற்கு காரணம் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனது தான். அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்த ஜகமே தந்திரம், ஆனந்த் எல் ராய் இயக்கிய அட்ரங்கி ரே மற்றும் கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் என வரிசையாக அவர் நடித்த மூன்று படங்களும் பிளாப் ஆகின.

இதையும் படியுங்கள்... திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் வடிவேலு... போண்டா மணிக்கு செய்ய உள்ள உதவி குறித்தும் பேச்சு

இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த மூன்று படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இவையெல்லாம் தியேட்டர்களில் ரிலீசாகி இருந்தால் தனுஷின் கெரியர் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கும். சினிமா கெரியர் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் இவர் சறுக்கலை தான் சந்தித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் தனுஷ்.

இவ்வாறு தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் தனுஷுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் தான். கடந்த மாதம் திரையரங்கில் ரிலீசான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமின்றி தனுஷுக்கு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது.

இதையும் படியுங்கள்... விரைவில் அம்மா ஆகப்போகிறாரா நயன்தாரா..? விக்னேஷ் சிவன் பதிவிட்ட போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இப்படத்தில் உணவு டெலிவெரி செய்பவராக நடித்திருந்தார் தனுஷ். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது தனுஷின் அலட்டல் இல்லாத நடிப்பு தான். எந்தவித ஹீரோயிசமும் இன்றி அவர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தாலும், அது படத்தின் கதைக்கு பெரிதும் உதவியது. அதேபோல் நித்யா மேனன் - தனுஷுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் அனிருத்தின் இசையும், பாடல்களும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருந்தன.

இப்படம் ரசிகர்களை கவர்ந்ததற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இப்படத்தின் ரன் டைம். சமீப காலமாக ரிலீசாகும் படங்களெல்லாம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் வரை ஓடும் அளவுக்கு ரன் டைமை கொண்டு வெளியாகி வருகின்றன. இதுவே அப்படங்களின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைகின்றன. அப்படி இருக்கையில் திருச்சிற்றம்பலம் படம் 2 மணிநேரம் 2 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய அளவு ரன் டைமை கொண்டிருந்தது. இதன்காரணமாகவே கதையும் போரடிக்காமல் சென்றது. தனுஷின் இந்த கம்பேக் திரைப்படம் இன்று முதல் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதுவும் 4K தரத்தில்.

இதையும் படியுங்கள்...  அடிச்சு டார்ச்சர் பண்ணிய கணவர்... ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.50 ஆயிரம் - சோகங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம்

click me!