தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவரின் இரண்டாவது மகள்... அதிதி ஷங்கர், கடந்த ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில், சூர்யா தயாரிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். டாக்டருக்கு படித்து விட்டு, அதிதி திடீர் என நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியது, ஆச்சர்யத்தை ஏற்படுத்திய போதிலும்... சிறு வயதில் இருந்தே நடிப்பு என்றால் மிகவும் இஷ்டம் இதன் காரணமாகவே நடிகையாக முடிவு செய்ததாகவும் கூறினார்.
இந்த படத்தில் அதிதி ஷங்கர் பாடி இருந்த 'மதுரை வீர அழகுல' பாடலை முதலில், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி குரலில்... யுவன் ஷங்கர் ராஜா பதிவு செய்த நிலையில், பின்னர் அவரின் குரலில் உருவான பாடலை தூக்கி விட்டு அதிதியை பாட வைத்தனர். இது குறித்து அப்போதே ராஜலட்சுமி மிகவும் மனவருத்தத்துடன் பகிர்ந்து கொண்டது மட்டும் இன்றி, அதிதியை பிரபலமாக்க இப்படி 'விருமன்' படக்குழு செய்ததாக சர்ச்சைகளும் எழுந்தது.
இந்த பாடலை முதலில் ஆகஸ்ட் 16 1947, கர்ணன், குட் நைட் போன்ற படங்களில் பாடல்கள் பாடிய பாடகி மீனாட்சி இளையராஜா தான் பாடி இருந்தாராம். பின்னர் இவரின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடலை நீக்கி விட்டு, அதிதி ஷங்கரை பாட வைத்துள்ளதாக குற்ற சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் தன்னுடைய வளர்ச்சிக்காக மற்றவர்கள் வாய்ப்புகளை அதிதி தட்டி பறிப்பதாக சில சர்ச்சை கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.