ஆனந்த யாழை மீட்டுகிறாய்... அப்பா ஷங்கருடன் கொஞ்சி விளையாடிய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர்!

First Published | Aug 17, 2023, 6:06 PM IST

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, அவருடைய மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் தன்னுடைய தந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை பதிவு செய்த இயக்குனர் ஷங்கர், ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பிரமாண்டமாக படம் எடுப்பதில் வல்லவர். வெளிநாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் தொழில் நுட்படங்கள் பலவற்றை, தமிழில் அவர் இயக்கிய படங்களில் பயன்படுத்தியுள்ளார்.

எனவே இவரை கோலிவுட் ரசிகர்கள் பலர், ஹாலிவுட் இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்டீல்பர்க், ஜேம்ஸ் கேமரூன்  போன்ற இயக்குனர்களுடன் ஒப்பிடுவது வழக்கம். காரணம் இவருடைய கற்பனை திறன் ஹாலிவுட் இயக்குனர்களுக்கு நிகரானது எல்லாம். அப்படி இவர் இயக்கிய இந்திரன், 2.ஓ போன்ற படங்கள் கோலிவுட் திரையுலகில் அதிக வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படக்குழுவினருடன் 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்! போட்டோஸ்..

Tap to resize

மேலும் தன்னுடைய படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும், பாடலையும் மிகப்பெரிய மெனக்கெடலுடன் பல லட்சம் செலவழித்து எடுக்க கூடியவர் ஷங்கர். இதனால் இவர் அதிகம் செலவு செய்யும் இயக்குனர் என பார்க்கப்பட்டாலும், அதற்கேற்ற பலனை படங்களில் காட்டுவார். தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். 

இந்நிலையில் 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் ஷங்கர் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். மேலும் அதிதி ஷங்கர் தந்தையை கட்டிப்பிடித்து கொஞ்சவது போன்ற புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. இதை பார்க்கும் போதே தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா.! கோவத்தில் வார்த்தையை விட்ட குணசேகரன்... நோஸ் கட் செய்த ரேணுகா!

Latest Videos

click me!