சத்யஜித் மிஸ்ரா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள மசபா பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் ஒரே மகள் ஆவார். இவர் பல பாலிவுட் நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே சத்யதீப் மற்றும் மசபா இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமண உறவில் இணைந்துள்ளனர்.