தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழிலும் மிஷ்கின் இயக்கிய முகமுடி, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே நடிப்பில் தற்போது இந்தியில் ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா. இது தமிழில் அஜித் - சிவா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
இப்படி சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, போட்டோஷூட் நடத்துவதிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் பட்டுச் சேலையில் புதுமணப் பெண் போல் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகின.