நடிகை திரிஷாவுக்கு 2022-ம் ஆண்டு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். மணிரத்னம் இயக்கிய அப்படத்தில் குந்தவை என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் அழகிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் திரிஷா நடித்த ராங்கி திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் திரிஷா. இப்படத்துக்கு பின்னர் திரிஷா நடிக்க கமிட் ஆன திரைப்படம் தான் தளபதி 67.
தளபதி 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். நடிகை திரிஷாவும் அவர்களுடன் சென்றிருந்தார். அங்கு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த உள்ளனர்.