பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க! நடிகை விஜயலட்சுமி பகிர்ந்த பகீர் தகவல்!

First Published | Aug 24, 2023, 4:30 PM IST

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகை விஜயலட்சுமி தற்போது, தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து, பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
 

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சென்னை 28' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம், கசடதபர, உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
 

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திடீரென தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஃபேரோஸ் முஹம்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே குணச்சித்திர வேடத்தில் தலைகாட்டிய விஜயலட்சுமி... சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக மாறினார்.

அப்பதாவ காணுமா? செய்யுறதையும் செஞ்சிட்டு ஓவர் சவுண்டு விட்ட குணசேகரன்! ஜனனியிடம் சிக்கிய தரமான சம்பவம்!

Tap to resize

bigg boss vijayalakshmi

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட விஜயலட்சுமி வெற்றிகரமாக 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து, மூன்றாவது இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும், டும் டும் டும் என்கிற சீரியலில் நடித்தார். அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டில் பட்டதை கைப்பற்றியதோடு 1 கோடி பரிசு தொகையை வென்றார்.

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி சில படங்களில் நடித்து வந்தார். அதே போல் சில வெப் சீரிஸ்-களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

49 வயதில் மிட்நைட் மேட்னஸ் போஸ் கொடுத்த கஸ்தூரி! என்ன மேடம் நைட் ரொம்ப மூடா? தெறிக்க விட்ட நெட்டிசன்ஸ்!

இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, "நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி இருக்க வேண்டும் என்பது கிடையாது... ஆனால் பல இடங்களில் இதுதான் நடக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், அவர்கள் படுக்கைக்கு வருவார்களா என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு முறை இது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அட்ஜஸ்ட்மென்ட் கோரிக்கையுடன் சிலர் என்னை அணுகினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் நடிப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆரம்பத்தில் மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தன்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் கூறிவிட்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கியதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனரின் , மகளுக்கே திரையுலகில் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் நடந்துள்ளதா? என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest Videos

click me!