இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவின் ரசிகர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதுவும் ஓசியாக அல்ல, காசு கொடுத்தால் தான் ரசிகர்களுக்கு எண்ட்ரி என்று அறிவித்தனர். அதன்படி இந்நிகழ்ச்சிக்கான எண்ட்ரி டிக்கெட் குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து, அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். சமந்தா வாங்கிய பெரும் தொகையே இந்த டிக்கெட் விலை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.