ஜஸ்ட் மிஸ்... இல்லேனா என்ன ஆகிருக்கும்? ஓட்டல் ரூமில் இருந்த ரகசிய கேமராவை அலேக்காக தூக்கிய தமிழ் பட நடிகை

Published : Aug 24, 2023, 09:28 AM IST

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை தங்கியிருந்த ஓட்டல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
ஜஸ்ட் மிஸ்... இல்லேனா என்ன ஆகிருக்கும்? ஓட்டல் ரூமில் இருந்த ரகசிய கேமராவை அலேக்காக தூக்கிய தமிழ் பட நடிகை
Kriti Kharbanda

டெல்லியை சேர்ந்தவர் கிரித்தி கார்பந்த். இவர் கடந்த 2009-ம் ஆண்டு திரைக்கு வந்த போனி என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இந்தி, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்த கிரித்தி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த புரூஸ் லீ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

24
Bruce Lee movie Heroine

இந்நிலையில், நடிகை கிரித்தி தான் தங்கிய ஓட்டல் அறையில் ரகசிய கேமரா இருந்ததாக பகீர் சம்பவம் ஒன்றை கூறி இருக்கிறார். அதன்படி, கன்னட படத்தில் நடித்தபோது, நான் ஓட்டல் அறையில் தங்கியபோது, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் என்னுடை அறையில் கேமரா ஒன்றை ரகசியமாக மறைத்து வைத்து சென்றிருந்தார். நான் எந்த ஓட்டலில் தங்கினாலும் அங்கு கேமரா இருக்கிறதா என்பதை நானும், என் குழுவினரும் சோதிப்பதி வழக்கம்.

இதையும் படியுங்கள்... இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி படம்... ஆதிபுருஷ் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?

34
Kriti Kharbanda about Hidden Camera

அந்த வகையில், சோதனை மேற்கொண்ட போது செட் ஆப் பாக்ஸ் பின்னால் ரகசியமாக கேமராவை ஒளித்து வைத்திருந்ததை கண்டுபிடித்தோம். கேமராவை வைத்த நபர் சரியாக மறைத்து வைக்காததால் கண்டுபிடித்துவிட்டோம். அநேகமாக அவர் கேமராவை மறைத்து வைப்பதில் அனுபவமற்றவராக இருப்பார் என நினைக்கிறேன். ஓட்டல் அறையில் தங்கும் போது இந்த விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

44
Actress Kriti Kharbanda

இதுதவிர பெங்களூருவில் ஒருமுறை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பைக்கில் வந்த ஒருவன் என் பின்னால் தட்டிவிட்டு சென்றான். அவன் தட்டிய வேகத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். ஆனால் அவனோ எதுவும் நடக்காதது போல சென்றுவிட்டான். இதேபோல் போட்டோ எடுக்க வேண்டும் எனகூறி என்னை கண்ட இடத்தில் தொட்ட சம்பவங்களும் பலமுறை நடந்திருக்கிறது என நடிகை கிரித்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தளபதி 68.. இணையப்போகும் அந்த இரண்டு மாஸ் ஹீரோஸ் இவங்கதானா? வெங்கட் பிரபு போடும் டக்கர் பிளான்!

Read more Photos on
click me!

Recommended Stories