இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி படம்... ஆதிபுருஷ் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?

First Published | Aug 24, 2023, 8:41 AM IST

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்த ஆதிபுருஷ் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டம் இவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Adipurush

பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆனார் பிரபாஸ். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகளாக பிரபாஸுக்கு குவிந்தன. பாகுபலிக்கு பின்னர் 3 பிரம்மாண்ட படங்களில் நடித்த பிரபாஸ் அதில் மூன்றிலுமே தோல்வியை தழுவி இருக்கிறார். அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷியாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

Prabhas, Kriti sanon

ராதே ஷியாம் திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை ராதா கிருஷ்ணா என்பவர் இயக்கி இருந்தார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பிரபாஸை ஆக்‌ஷன் ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் அவரை ரொமாண்டிக் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவே இப்படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆதிபுருஷ் திரைப்படம் மொத்தமாக ரூ.170 கோடி நஷ்டத்தை சந்தித்து, மிகப்பெரிய தோல்வி படம் என்கிற மோசமான சாதனையை படைத்திருந்தது.

இதையும் படியுங்கள்... தளபதி 68.. இணையப்போகும் அந்த இரண்டு மாஸ் ஹீரோஸ் இவங்கதானா? வெங்கட் பிரபு போடும் டக்கர் பிளான்!

Tap to resize

Adipurush Prabhas

தற்போது ஆதிபுருஷ் படம் மூலம் அந்த மோசமான சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் பிரபாஸ். கடந்த ஜூன் மாதம் ஓம் ராவத் இயக்கத்தில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. மோசமான திரைக்கதை மற்றும் சொதப்பலான விஎப்எக்ஸ் ஆகியவற்றால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடி வசூலித்தாலும் ரூ.225 கோடி நஷ்டமடைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Adipurush biggest disaster

இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி படம் என்கிற மோசமான சாதனையை ஆதிபுருஷ் படைத்திருக்கிறது. இந்த பட்டியலில் ரூ.170 கோடி நஷ்டத்துடன் ராதே ஷியாம் இரண்டாவது இடத்திலும், ரூ.140 கோடி நஷ்டத்துடன் சாம்ராட் பிருத்விராஜ் மூன்றாவது இடத்திலும், ரூ.100 கோடி நஷ்டத்துடன் சம்ஷேரா நான்காவது இடத்திலும், ரூ.80 கோடி நஷ்டத்துடன் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இதையும் படியுங்கள்... 'காவாலா' பாடலுக்கு உகாண்டா நாட்டு சிறுவர்கள் போட்ட மாஸ் குத்தாட்டம்! இதை ஷேர் செய்தது யார் தெரியுமா?

Latest Videos

click me!