தளபதி 68.. இணையப்போகும் அந்த இரண்டு மாஸ் ஹீரோஸ் இவங்கதானா? வெங்கட் பிரபு போடும் டக்கர் பிளான்!
Ansgar R |
Published : Aug 24, 2023, 08:23 AM IST
இந்திய திரை உலகை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட முக்கியமான நடிகர், நடிகைகள் இணைந்து கலக்கவுள்ள திரைப்படம் தான் லியோ. வெளியீட்டுக்கு முன்பாகவே பல சாதனைகளை படைத்து வருகிறது இந்த திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தை அடுத்து, தளபதி விஜய் அவர்கள் தனது அடுத்த பட பணிகளில் விரைவில் இணையவுள்ளார்.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக நடிகர் தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் சென்னை 28, கோவா, மங்காத்தா மற்றும் மாநாடு உள்ளிட்ட பல ஜனரஞ்சகமான படங்களை கொடுத்தவர் வெங்கட் பிரபு, இறுதியாக அவர் இயக்கத்தில் கஸ்டடி என்ற படம் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வெளியாகியுள்ள அதே நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் தளபதியின் 68வது திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் பிரபல நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் இணைய உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
34
Thalapathy Vijay and prabhu deva
இந்த சூழலில், இந்த திரைப்படத்தில் சில முன்னணி நடிகர்களும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வகையில் இந்தியாவின் பிரபல நடன இயக்குனரும், மூத்த நடிகருமான பிரபு தேவா அவர்கள் தளபதி 68 திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
44
Kollywood Actor R Madhavan
மேலும் தமிழ் திரையுலகத்தில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, இன்று பல சிறந்த திரைப்படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ள பிரபல நடிகர் மாதவன் அவர்களும், தளபதி விஜய் அவர்களுடன் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவா மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், முதல் முறையாக நடிகர் மாதவன், தளபதி அவர்களுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.