விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், அதிகப்படியான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி '. ஒவ்வொரு வாரமும் TRP டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து கெத்து காட்டி வரும் இந்த சீரியலில், பாக்யலட்சுமியின் இரண்டாவது மருமகள், அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா.
இதனை உறுதி செய்யும் விதமாக, சமீபத்தில் பாக்கியலட்சுமி பட குழுவினர் எடுத்து கொண்ட குரூப் போட்டோவில், அமிர்தாவுக்கு பதில் அன்ஷிகா இடம்பெற்றிருந்தனர். கோபியும், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ரித்திகாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ,எங்கிருந்தாலும் வாழ்க என போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார்.
அதாவது விஜய் டிவி தொலைக்காட்சியில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரித்திகா கலந்து கொள்ள உள்ளதாகவும், இதன் இதன் காரணமாகவே தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் உண்மையான காரணம் இந்த இரண்டில் ஒன்றா? அல்லது வேறு ஏதாவதா? என்பது தெரியவில்லை.