சிறந்த நடிகருக்கான போட்டியில் சிம்பு - தனுஷ்... மீண்டும் மகுடம் சூடுவாரா சூர்யா? தேசிய விருது இன்று அறிவிப்பு

First Published | Aug 24, 2023, 10:37 AM IST

69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அதற்காக போட்டியிடும் நடிகர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

69th National Film awards

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ் படங்கள் என்னென்ன?

2021-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருது தான் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி தமிழ் சினிமாவை பொறுத்தவரை தனுஷின் கர்ணன், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யாவின் ஜெய் பீம், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், சிம்புவின் மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஜெய் பீம், கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் செம்ம டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சிம்பு தனுஷ் இடையே நிலவிய போட்டி.. அப்போது வெளியான ரஜினிகாந்த் மகளின் ஆடியோ! - ஒரு சின்ன Rewind!


சிறந்த நடிகர்கள்

68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சூர்யா, இம்முறை ஜெய் பீம் படத்திற்காக அவ்விருதை மீண்டும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அப்படத்தில் நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதவிர கர்ணன் படத்திற்காக நடிகர் தனுஷ், சார்பட்டா பரம்பரைக்காக நடிகர் ஆர்யா, மாநாடு படத்துக்காக நடிகர் சிம்பு ஆகியோரும் இந்த போட்டியில் உள்ளனர்.

செம்ம போட்டி

அதேபோல் சிறந்த பின்னணி இசைக்காக அனிருத்திற்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மாஸ்டர் படத்தின் இசைக்காக அவருக்கு விருது கிடைக்கும் என யூகிக்கப்படுகிறது. கடந்தாண்டு சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியதைப் போல், இந்த ஆண்டு தேசிய விருதுகளில் அவரின் ஜெய் பீம் திரைப்படம் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. சிறந்த இயக்குனர்களுக்கான போட்டியில் த.செ.ஞானவேல், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் ஆகியோரும் உள்ளதால் செம்ம போட்டி இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி படம்... ஆதிபுருஷ் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?

Latest Videos

click me!