நடிகருடன் காதல்... நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும்டும்டும்...!

First Published | Aug 24, 2023, 2:25 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Nithya Menon

மலையாள நடிகையான நித்யா மேனன், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வெப்பம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2, மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, சூர்யா உடன் 24, விஜய்க்கு ஜோடியாக மெர்சல் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார்.

Actress Nithya Menon

இதையடுத்து உடல் எடை கூடியதால் நடிகை நித்யா மேனனுக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்த நித்யா மேனன், கடந்தாண்டு தனுஷுக்கு ஜோடியாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகை நித்யாமேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி நாயகனை விரட்டி வந்த அஜித் ரசிகர்கள்... சென்னை ஏர்போர்டில் பரபரப்பு - வைரலாகும் வீடியோ

Tap to resize

Nithya Menon marriage rumours

நடிகை நித்யா மேனன் தமிழில் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். அண்மையில் இப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. இந்த நிலையில், நடிகை நித்யா மேனனின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Nithya Menon Love Rumour

அதன்படி, நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவர் தனது பள்ளிப்பருவ நண்பரை காதலித்து வருவதாகவும், அந்த நபர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருவதாகவும், அவருடன் தான் நடிகை நித்யா மேனனுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. நித்யா மேனன் குறித்த இந்த திருமண தகவல் உண்மையா, இல்லையா என்பது அவர் விளக்கம் அளித்தால் தான் உறுதியாகும்.

இதையும் படியுங்கள்...   ஆக்‌ஷன் ஹீரோவாக துல்கர் சல்மான் மிரட்டினாரா? சொதப்பினாரா? - கிங் ஆஃப் கொத்தா விமர்சனம்

Latest Videos

click me!