புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! குவியும் பாராட்டு!

First Published | Mar 5, 2023, 12:56 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார், இன்று தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
 

பல்வேறு தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னை எழும்பூரில் உள்ள 'Institute of Child Health'-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 'ஜாய் ஆஃப் ஷேரிங்' என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், டாக்டர் வேல் முருகன் ஆகியோர் பேசினர். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசுகையில், “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

ஹாட் ஸ்டார் ஓடிடியில் பட்டையை கிளப்பும் 'தி லெஜெண்ட்'! வேற லெவல் வீடியோவுடன் சரவணன் அருள் போட்ட பதிவு.!

Tap to resize

நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு  முடித்தவர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். 

பல நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள சங்கல்ப் மற்றும் மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர். பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இந்தச் செய்தியை அதிகம் பகிரும்படி பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அரசியல்வாதியின் மகளை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர் மஞ்சு மனோஜ்!

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடிகை வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிளில் பயணித்து முடித்தவர்களைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!