கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ், பூமா மௌனிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பூமா மௌனிகா மறைந்த முன்னாள் அமைச்சர் பூமா நாகிரெட்டியின் இளைய மகள் ஆவார்.
மஞ்சு மனோஜ் மற்றும் பூமா மௌனிகா இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் என்பதால், மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த சிறுவன் யார் என்கிற கேள்வியும் டோலிவுட் திரையுலகில் எழுந்துள்ளது. மஞ்சு மனோஜின் முதல் மனைவி பிரணதி ரெட்டிக்கு குழந்தைகள் இல்லை. மேலும், மௌனிகா ரெட்டிக்கு முதல் திருமணத்தில் குழந்தைகள் இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் இந்த சிறுவன் யார் என்பது பெரும் கேள்வியாக மாறியுள்ளது. அதே நேரம் இது மஞ்சு விஷ்ணு மகனின் கைகளோ? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரம் மனோஜின் திருமணம் அவரது தந்தை மோகன் பாபுவுக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் வெளியான நிலையில். மோகன் பாபு மிகவும் சந்தோஷமாக திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மஞ்சு மனோஜ் முதலில் பிரணதி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதே போல் மௌனிகாவும் ஏற்கனவே கணேஷ் ரெட்டி என்ற நபரை திருமணம் செய்து கொண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட புது பிளான்..! 25 வருடங்களுக்கு ரீ என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஜீவிதா..!