வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது... அண்ணன், தங்கை, அப்பா, அம்மா, மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் மற்றவர்களோ இவரை பற்றி பேசுவதும் இல்லை, இவர் குறித்து கேள்வி கேட்டால் கூட அதை தவிர்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தன்னுடைய அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் வனிதா, இன்று தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் மிகவும் உருக்கமாக பதிவு போட்டுள்ளது மட்டுமின்றி, தன்னுடைய அம்மா தெலுங்கு திரை உலகில் நுழைந்து 50 வருடங்கள் ஆவதையும் நினைவு கூர்ந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள், வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு... மிகவும் ஃபீல் செய்து பதிவு போட்டிருக்கும் வனிதாவுக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு நடந்த திருமணம்..! ஒன்று கூடிய பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்!
மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகளான, வனிதா 1990 ஆம் ஆண்டு... தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்த பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் முழுவதுமாக திரையுலகில் இருந்து விலகிய இவர், சில வருடங்கள் கழித்து கணவர் ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்து பெற்ற அதே ஆண்டு, ஆனந்த் என்பவரை இரண்டாம் திருமண செய்து கொண்ட வனிதா... அவரிடம் இருந்தும் ஒரு சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் திரைப்பட நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இறங்கிய வனிதா... நடன இயக்குனர் ராபட்டை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்போது இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் ப்ரோமோஷன்காகவே இப்படி நடந்து கொண்டதாக ராபர்ட் கூறியது பரபரப்பின் உச்சம்.
செம்ம ஸ்ட்ரெக்ச்சர்... சேலையில் கூட ஸ்டைலிஷ் பேபியாக மாறி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஒருவழியாக இந்த காதல் சர்ச்சையில் இருந்து மீண்டு, தன்னுடைய குழந்தைக்காக வனிதா நடத்திய பாச போராட்டம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. வாழ்க்கையில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வனிதா... அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். ஆரம்பத்திலேயே இவருடைய விளையாட்டுகள் மிகவும் பரபரப்பாக இருந்த நிலையில், மக்களால் வெளியேற்றப்பட்ட பின்பும், மீண்டும் வயல் கார்டு சுற்றில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதற்காக அவர் வாங்கிய தொகையும் பெருசு என கூறப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டிலை கைப்பற்றிய வனிதா விஜயகுமார், திடீரென பீட்டர் பால் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறி, தன்னுடைய இரண்டு மகள்கள் முன்பு கிறிஸ்தவ முறையில் வீட்டிலேயே திருமணம் செய்தது மிகப்பெரிய சர்ச்சையாக பாக்கப்பட்டது. அதிலும் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததும் அதற்காக பீட்டர் பால் மனைவி எலிசபெத் நியாயம் வேண்டும் என போர் கொடி தூக்கியது ஒரு மாதம் வரை, சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களாக இருந்தது.
'மாமன்னன்' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா? வெளியான தகவல்!
பீட்டர் பாலை திருமணம் செய்த ஓரிரு மாதத்திலேயே, அவரிடம் இருந்து பிரிந்த வனிதா விஜயகுமார் தங்களுடைய திருமணம் முறையாக செய்யப்பட்ட திருமணம் அல்ல, இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் தான் வாழ்த்தோம் என, பீட்டர் பால் மரணத்திற்கு பின் கூறினார். தற்போது , சின்னத்திரை வெள்ளித்திரை என படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வனிதா பொத்திக் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார், தற்போது தன்னுடைய அம்மா குறித்து மிகவும் உருக்கமாக... போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தன்னுடைய அம்மாவின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவில்... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா, 10 வருடங்கள் ஆகியும் இன்னும் உங்களை பற்றி நினைப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. நீ எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் உன்னை போலவே நான் செய்து வருகிறேன். எனது ஸ்கிரீன் சேவர், வால்பேப்பர், மற்றும் எனது வீட்டில் உன்னை பற்றிய நினைவுகள் உள்ளது. என்னை சுற்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை ஒரு நாள் சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.
செம்ம கியூட்..!முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி... செந்தில் - ஸ்ரீஜா!
மேலும் இந்த வீடியோவில் தன்னுடைய அம்மா தெலுங்கு திரை உலகில் காலடி எடுத்து வைத்து 50 வருடங்கள் நிறைவு பெற்றதையும் நினைவுகூர்ந்து உள்ளார் வனிதா. இதை தொடர்ந்து வனிதா விஜயகுமாருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதோடு, வனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவுக்கு அவரின் ரசிகர்கள் ஆறுதலையும் கூறி வருகிறார்கள்.