அட நம்ம மகேஷ் பாபு மகளா இது.. டைம்ஸ் ஸ்கொயரில் மின்னும் சித்தாராவின் புகைப்படங்கள் - ஏன்?

Ansgar R |  
Published : Jul 04, 2023, 07:46 PM IST

கடந்த 2005ம் ஆண்டு மகேஷ் பாபு, நம்ரதா ஷிரோத்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

PREV
14
அட நம்ம மகேஷ் பாபு மகளா இது.. டைம்ஸ் ஸ்கொயரில் மின்னும் சித்தாராவின் புகைப்படங்கள் - ஏன்?

தமிழ் திரையுலகுக்கு தளபதி விஜய் எப்படியோ, அப்படித்தான் தெலுங்கு திரை உலகில் மகேஷ்பாபு. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். தனது பட்டப் படிப்பை கூட அவர் பிரபல லயோலா கல்லூரியில் தான் முடித்தார். ஆனால் இன்று தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் ஸ்டார் ஆக திகழ்ந்து வருகிறார்.

24

கடந்த 2005ம் ஆண்டு மகேஷ் பாபு, நம்ரதா ஷிரோத்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர். மகேஷ் பாபு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாத பொழுதும், அவருடைய மனைவி நம்ரதா மற்றும் மகள் சித்தாரா சமூக வலைதளங்களில் அடிக்கடி பல பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : "விலைவாசி எகிறிப்போச்சு".. சினிமா டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

34

இந்நிலையில் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தற்பொழுது விளம்பர மாடலாக தனது கலை பயணத்தை துவங்கி உள்ளார். ஒரு நகை கடைக்கு அவர் மாடலாக போஸ் கொடுத்துள்ளார், இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சித்ரா பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

44

சித்தாரா மாடலாக நடித்துள்ள அந்த நகை விளம்பரம் தற்பொழுது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள பிரபலமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நர்மதா அணியும் நகைகளை சித்தாரா சிக்னேச்சர் கலெக்ஷன் என பெயரிட்டு அந்த நகைக்கடை விளம்பரப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு நடந்த திருமணம்..!

click me!

Recommended Stories