மௌனம் பேசியதே படம் மூலமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இன்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆதி படங்களில் நடித்த த்ரிஷா மீண்டும் 19 ஆண்டுகளுக்கு பிறகு 'லியோ' படத்தில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, இடையில் சில வருடங்கள் சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தாலும், கதையின் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையிலும் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், மார்க்கெட்டை இழந்தார்.
நயன்தாராவுக்கு நிகராக சம்பளம்
சம்பளத்தில் நயன்தாராவுக்கு நிகராக ஒரு படத்திற்கு 8 முதல் 10 கோடி வரை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ, மற்றும் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படங்களில் நடித்தார்.
நின்றுபோன திருமணம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் த்ரிஷாவிற்கும் பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பிறகு திருமணம் நின்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவ்வப்போது சில காதல் சர்ச்சைகளில் த்ரிஷா சிக்கியபோதும், எதுவும் திருமணம் வரை செல்லவில்லை.
திரிஷா வெளியிட்ட புகைப்படம் மற்றும் போட்டோ
இந்த நிலையில் தான் த்ரிஷா பதிவிட்ட புகைப்படம் மற்றும் கேப்ஷன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு அவருக்கு நிச்சயதார்தமா என்ற விவாதத்தை தூண்டியிருக்கிறது. பச்சை நிற பட்டுப்புடவையில் தலையில் மல்லிகைப்பூ, மூக்குத்தியில் பேரழகியாக ஜொலிக்கிறார். இந்தப் புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு Love Always Wins என்று கேப்ஷன் குறிப்பிட்டிருக்கிறார். த்ரிஷாவின் இந்தப் புகைப்படத்தை 1000க்கும் அதிகமானோர் ரீ போஸ்ட் செய்ததோடு 21000க்கும் மேற்பட்டோர் லைக்ஸை பெற்றுளளது.
இது போட்டோஷுட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ? அல்லது மூவி ஷூட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ இருக்கலாம் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாக இருந்தாலும், ஒரு சிலர் உங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என்கிற கேள்வியோடு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
காசுக்காக பொய் சொல்கிறாரா த்ரிஷா? பாடகர் கருத்தால் பரபரப்பு!