Published : Mar 29, 2025, 02:54 PM ISTUpdated : Mar 30, 2025, 09:39 PM IST
மலையாள நடிகை சாய் பல்லவி தனது இயல்பான அழகு மற்றும் எளிமைக்கு பெயர் பெற்றவர். மேக்கப் இல்லாமல் நடிப்பதையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பற்றி பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார். இப்போது அவரது எனர்ஜி சீக்ரெட் ட்ரிங்க் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாளம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. தனது இயல்பான அழகு மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். அவரது பருக்கள் நிறைந்த முகம், ஒப்பனை இல்லாத தோற்றம் அவரது அழகை மேலும் மெருகேற்றுவதாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள்.
26
பிரேமம் செய்த மேஜிக்:
இவர் அறிமுகமான 'பிரேமம்' படத்தில் அவர் செய்த மேஜிக் இந்த படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு காரணமாக அமைந்ததோடு, இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகுத்தது. சினிமாவில் தங்களை நிறுத்திக்கொள்ள கவர்ச்சி வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்த சாய் பல்லவி , பாரம்பரிய உடைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தமிழில் இவர் நடித்து வெளியான அமரன் படம், சாய் பல்லவி சினிமா கேரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் போல் பார்க்கப்பட்டது. இந்த படத்திற்காக, சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாகவும் இருந்து வருகிறது. சாய் பல்லவியின் நடிப்பு ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பையே பீட் செய்து விட்டதாக திரைப்பட விமர்சகர்கள் கூறினர்.
46
தண்டேல் படத்தின் 100 கோடி வசூல்:
அதே போல் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக 'தண்டேல்' திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த படம் நாக சைதன்யாவுக்கு 100 கோடி வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் , 'தண்டேல்' படத்தின் விளம்பரத்தின் போது, ஹீரோ நாக சைதன்யா, சாய் பல்லவி குறித்து ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். அதாவது சாய் பல்லவி தினமும் குறைந்தது ஐந்து லிட்டர் இளநீர் குடிப்பார் என்று நகைச்சுவையாக கிண்டல் செய்தார். சாய் பல்லவி இதைக் கேட்டு சிரித்தார். அவ்வளவு அதிகமாக இல்லை. இருப்பினும், சுமார் இரண்டு லிட்டர் இளநீரை தவறாமல் உட்கொள்கிறேன் என்று தெளிவுபடுத்தினார். அதாவது சாய் பல்லவியின் நேச்சுரல் அழகு மற்றும் உடல் ஃபிட்னஸ், எனர்ஜிக்கு இதுவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
66
2 லிட்டர் இளநீருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சாய் பல்லவி
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் போதே, 2 லிட்டர் பாட்டிலில் இளநீருடன் தான் வருவாராம். தன்னுடைய நேச்சுரல் அழகை பராமரிக்க இன்னும் பல விஷங்களை சாய் பல்லவி சாப்பாட்டில் கடைபிடிக்கிறார். தன்னுடைய டயட்டில், தினமும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.