இரண்டே நாளில் 100 கோடி! பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்த 'L2: எம்புரான்'!
நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன L2: எம்புரான் திரைப்படம், ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன L2: எம்புரான் திரைப்படம், ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
மலையாள சினிமாவின் வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவான படம் எம்புரான். பிருத்விராஜின் இயக்கத்தில் வெளியான லூசிஃபரின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம், மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக மாறியது. வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கியபோதே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது.
'எம்புரான்' வெளியான முதல் நாளே, ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து 'எம்புரான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இணையத்தில் லீக்கான L2: எம்புரான்; உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!
அதன்படி உலக அளவில், பாக்ஸ் ஆபிஸில் இரண்டு நாள் முடிவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லால், மஞ்சு வாரியர், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த மாபெரும் வசூலுக்கு, மோகன்லால் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில், வெளியான முதல் நாளில் ஒரு மலையாள படம் இதுவரை கனவில் கூட காண முடியாத சாதனையை படைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் மட்டும் முதல் நாளில் 5 மில்லியன் டாலர்களை கடந்த படம், இந்தியாவில் இருந்து 25 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டுமே ஏம்புரான் 50 கோடி வசூலை எட்டி உள்ள நிலையில், உலகம் முழுவதும் 100 கோடி வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
முதல் நாளே விஜய் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய எம்புரான்!