விஜய் டிவியில், நம்பர் 1 சீரியலாக இருக்கும் 'சிறகடிக்க ஆசை' தொடரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். கடந்த 2023-ம் ஆண்டு, துவங்கப்பட்ட இந்த தொடர்... 2 வருடங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குமரன் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில், வெற்றி வசந்த் ஹீரோவாக நடிக்க, கோமதி பிரியா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கார்த்திகை தீபத்தில் ஸ்ருதி நாராயணன்
மேலும் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர் ராஜன், சால்மா அருண், அனிலா குமார், தேவா, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். கல்லூரி காலத்தில் இருந்தே சீரியல் வாய்ப்பு தேட துவங்கிய இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்து வந்த நிலையில், பின்னர்... சிறகடிக்க ஆசை சீரியலின் வாய்ப்பை கைப்பற்றினார்.
ஸ்ருதியின் தோழி கதாபாத்திரம்
இந்த தொடரில், வில்லி ரோலில் நடிக்கும், ரோகிணிக்கு தோழியாக வித்யா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். ஏற்கனவே வயதான ஒருவரை திருமணம் செய்து, அவருடன் ஒரு குழந்தையையும் பெற்று கொண்ட ரோகிணி, தன்னுடைய பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து விட்டு, சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் என பொய் சொல்லி, மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். மாமியார் வீட்டில் பணம் வாங்கி பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கிய ரோகிணி தற்போது அதையும் விற்று விட்டார்.
லீக் ஆன அந்தரங்க வீடியோ; வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!
மற்ற உண்மைகள் தெரிந்தால் கலவரம் வெடிக்கும்
ரோகிணி பணக்கார வீட்டுப் பெண் இல்லை என்கிற உண்மை தெரிய வந்ததற்கே பல பிரச்சனைகள் வெடித்து, விஜயா, ரோகிணியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ள நிலையில், இவரை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வந்தால் பெரிய கலவரமே வெடிக்கும் என்பது மற்றும் உண்மை.
ஸ்ருதி நாராயணனின் AI வீடியோ சர்ச்சை
இந்நிலையில், இந்த சீரியலில் நடித்து வந்த ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ ஒன்று கடந்த ஒரு வாரமாகவே சோசியல் மீடியாவில் தீயாக பரவி வந்த நிலையில், இது உண்மை கிடையாது AI வீடியோ என ஸ்ருதி கூறி இருந்தார். ஆனால் இவரின் இந்த விளக்கமும் சர்ச்சையில் சிக்கியது. ஒரு சிலர் இது மார்பிங் வீடியோ தான் என இவர் சொல்லும் விளக்கத்தை ஏற்று கொண்டாலும், இன்னும் சிலர் இது ஒரு casting couch வீடியோ, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என கூறி வந்தனர்.
ஆவேச பதிவு
நெட்டிசன்கள் சிலர் அந்த வீடியோ கேட்டு சமூக வலைத்தளத்தில் கமெண்ட் போட்டு வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்ருதி நாராயணன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "நானும் பெண் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. நெருக்கடியான சூழலில் உள்ளேன். அதை சிலர் மோசமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லா வீடியோக்களையும் இப்படி பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்க. ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது.
வெடிக்கும் விமர்சனம்
என்னை குறைகூறி கொண்டிருக்கும் சிலர், இது போல் வீடியோ வெளியிடும் நபரை ஒரு கேள்வி கூட ஏன் கேட்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஒரு புறம் ஆதரவு கூடினாலும்... சிலர் வழக்கம் போல் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.