'L2: எம்புரான்' திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் இணைந்து நடித்துள்ளனர். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக Filmyzilla, Movierulez மற்றும் Telegram போன்ற பல்வேறு இணையதளங்களில் சட்டவிரோதமாக லீக் ஆகி உள்ளது படக்குழுவினர் தலையில் இடியை இறக்கியது போல் ஆகி இருக்கிறது.
HD தரத்தில் லீக் ஆன எம்புரான்:
திரைப்படம், திருட்டுத்தனமாக வெளியாகாமல் இருக்க, படக்குழுவினர் எவ்வளவோ முயற்சி செய்தும், எம்புரான் திரைப்படம் HD தரத்தில் சில இணையதளங்களில் கசிந்துள்ளது. இது திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளதே படக்குழுவினர் அச்சத்திற்கு காரணம்.
முதல் நாளே விஜய் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய எம்புரான்!
படக்குழு சார்பில் கொடுக்கப்பட்ட புகார்
மேலும் எம்புறான் படக்குழு சார்பில் சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்பவர்களை கண்டறிந்து, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சில இணைய தளத்தில் இருந்து படம் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லூசிபர் படத்தின் 2-ஆம் பாகமாக வெளியான எம்புரான்
பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள எம்புரான் திரைப்படம், 2019 ஆம் ஆண்டு வெளியான மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகமாகும். இதில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், மஞ்சு வாரியர் மற்றும் டொவினோ தாமஸ் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Empuraan Review : அடிபொலியாக உள்ளதா எம்புரான்? முழு விமர்சனம் இதோ