'சூழல் 2' வெப் தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை மஞ்சிமா மோகன்!

Published : Mar 28, 2025, 04:36 PM ISTUpdated : Mar 28, 2025, 04:38 PM IST

சூழல் வெப் தொடரில், ஸ்பெஷல் ரோலில் நடித்த மஞ்சிமா மோகனுக்கு சிறந்த நடிகைக்கான ஓடிடி விருது வழங்கப்பட்டுள்ளது.  

PREV
16
'சூழல் 2' வெப் தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை மஞ்சிமா மோகன்!

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் பிஸியாக இருக்கும் மஞ்சிமா மோகன், 'சுழல் 2' வெப் தொடரில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான OTT விருதை பெற்றுள்ளார்.

26
நடிகை மஞ்சிமா மோகன்:

மலையாள திரை உலகை சேர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான 'கலியோஞ்சல்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில், மம்மூட்டி, திலீப், ஷோபனா, ஷாலினி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

திருமணமாகி பல மாதம் ஆகியும் ஹனி மூன் மூடில் வெளிநாடு பறந்த கவுதம் - மஞ்சிமா ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!

36
குழந்தை நட்சத்திரமாக மஞ்சிமா மோகன்:

 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மஞ்சிமா மோகன், 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்ஃபி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். இதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு, தமிழில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கூடியது.

46
கௌதம் கார்த்திக்குடன் திருமணம்:

பின்னர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார்.  தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் போது, அவரை காதலிக்க தொடங்கிய மஞ்சுமா மோகன்... கடந்த 2022-ஆம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். நடிகை என்பதை தாண்டி, டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 

56
'சூழல் 2' நாகம்மா:

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மஞ்சுமா மோகன், சமீபத்தில் ஓடிடியில் வெளியான, 'சூழல் 2' வெப் தொடரில், நாகம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரைம் திரில்லர் ஜார்னரில் வெளியான இந்த வெப் தொடரை பிரம்மா இயக்கி இருந்த நிலையில், புஷ்கர் காயத்ரி தயாரித்திருந்தனர்.

66
சிறந்த நடிகைக்கான விருது

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த டெத் தொடரில், நாகம்மா என்கிற கதாபாத்திரத்தில் தான் மஞ்சுமா மோகன் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் முழுவதும் வரவில்லை என்றாலும் இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. இந்த வெப் தொடரில் நடித்ததற்காக, இவருக்கு "ஸ்பெஷல் ரோலில் நடித்த சிறந்த நடிகைக்கான" ஓடிடி விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டியில் நடந்த 'டெக்னோபஸ் 25 ஆவது ஆண்டு விழாவில்' இந்த விருதை நாகம்மா கதாபாத்திரத்திற்காக பெற்றுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories