மோடி ஜீ... தமிழ்நாடுன்னா உங்களுக்கு அலர்ஜியா ஜீ? - விஜய் பளீச் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
Vijay Speech in TVK General Meeting : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகத்தை ஆளும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடியையும் சரமாரியாக விமர்சித்து பேசி இருக்கிறார். இதுவரை பெயரை குறிப்பிடாமல் பேசி வந்த விஜய், இந்த முறை ஸ்டாலின் பெயரையும், மோடி பெயரையும் உரக்கச் சொல்லி அவர்களுக்கு எதிராக பேசி இருக்கிறார்.
பெண்கள் தான் திமுகவுக்கு முடிவு கட்டப்போறாங்க
ஸ்டாலினை விமர்சித்து விஜய் பேசியதாவது : நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தி இருந்தீர்கள் என்றால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்கா இருந்திருக்கும், சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். இங்க பெண்களுக்கு நடக்குற கொடுமைகளை சொல்ல முடியல... இதுலவேற உங்கள அப்பானு வேற கூப்பிடுறாங்கனு சொல்றீங்க. தினம் தினம் உங்களுடைய இந்த கொடுமைகளை அனுபவிச்சுக்கு வர்ற என்னோட சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கே ஒரு முடிவு கட்டப்போறாங்க என கூறினார்.
இதையும் படியுங்கள்... நீங்க தடுக்க நாங்க ஒன்னும் ஆறு இல்ல... சூறாவளி! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த விஜய்
மோடி ஜீ அவர்களே...
தொடர்ந்து மோடியை விமர்சித்து பேசுகையில், இங்க தான் இப்படி என்றால் அங்க அவுங்க... உங்க சீக்ரெட் ஓனர், அவங்க உங்களுக்கும் மேல, மாண்புமிகு திரு மோடி ஜீ அவர்களே... என்னம்மோ உங்க பெயரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு பயம் மாறியும், நான் படத்துல லியோவ பாக்கணும்... லியோவ பாக்கணும்னு சொல்ற மாதிரி; நீங்க பெயரை சொல்லணும்னு அடம்பிடிக்கிறீங்க... நீங்க தான் கேட்டீங்க அதான் இப்போ சொல்லிட்டேன் வச்சிக்கோங்க.
தமிழ்நாடுன்னா அலர்ஜியா ஜீ?
ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக அரசியல் கூட்டணி என உங்க பெயரையே சொல்லி மக்களை ஏமாற்றுவதும், பயமுறுத்துவமா இருக்காங்க. இப்படி மறைமுகமாக இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி... தமிழ்நாடுன்னா உங்களுக்கு அலர்ஜி என கேள்வி எழுப்பி உள்ளார் விஜய். தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜிஎஸ்டி-யை கரெக்டா வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
தமிழ்நாடு பலபேருக்கு தண்ணிகாட்ன மாநிலம்
இங்க படிக்குற நம்ம பசங்களுக்கு நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள். டீ லிமிட்டேஷன் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களில் கைவைக்கப்பார்க்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல்னு நீங்க ஸ்டார்ட் பண்ணப்பவே புரிஞ்சிடுச்சு பிரதமர் சார். உங்களிடம் நாங்க சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமா கையாளுங்கள் சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணிகாட்ன மாநிலம் என விஜய் பேச பேச அங்கிருந்த நிர்வாகிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விஜய்யின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தவெக பொதுக்குழு கூட்டம்! டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்! இதோ முழு விவரம்!