விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தை மிஸ் பண்ணிய மனோஜ் பாரதிராஜா! எந்த படம் தெரியுமா?

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, 2 சூப்பர் ஹிட் வெற்றி படங்களை மிஸ் செய்து விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 

Manoj Bharathi Raja Missed 2 Super Hit Films mma

மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் இமையம் என ரசிகர்களால் கொண்டாடப்படும்,  மிகப்பெரிய ஜாம்பவான் பாரதி ராஜாவின் மகன் ஆவார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இவருடைய கனவாக இருந்த நிலையில், இதன் அழுத்தம் தான் இவருடைய மாரடைப்புக்கு காரணம் என்று தம்பி ராமையா உள்ளிட்ட சில பிரபலங்கள் கூறினர்.
 

Manoj Bharathi Raja Missed 2 Super Hit Films mma
தாஜ்மஹால் திரைப்படம்

அதே போல் பலமுறை சினிமாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என மனோஜ் பல பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இயக்குனராக வேண்டும் என்கிற எனது ஆசையை, தன்னுடைய தந்தைக்காக தூக்கி எரிந்து விட்டு, ஒரு நடிகராக மாறினார்.

அதன்படி தன்னுடைய தந்தை இயக்கத்திலேயே 1999-ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மனோஜ் பாரதிராஜாவுக்கு தாஜ் மஹால் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷம் எல்லாம் வசந்தம், போன்ற படங்களில் நடித்தார்.

இயக்குநர் மனோஜ் பாரதி திடீர் மரணம்; சிகிச்சையில் நடந்து என்ன?


'எந்திரன்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினார்

ஓரளவுக்கு இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றபொதும், இவரால் தன்னை ஒரு  நிலையான ஹீரோவாக திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. பின்னர் இவர் நடிப்பில் வெளியான பல்லவன் ஈரநிலம், மகா நடிகன், சாதுரியன் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால்... இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினார்.
 

மார்கழி திங்கள்

பின்னர் பல வருடங்கள் கழித்து, தன்னுடைய தந்தையை முக்கிய அதாபாத்திரத்தில் நடிக்க வைத்து,  2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து, சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
 

சேதுராமன் முதல் மனோஜ் பாரதிராஜா வரை; இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!

மனோஜ் பாரதி ராஜா மரணம்

இந்த நிலையில் தான் மனோஜ் பாரதிராஜா பாரதிராஜாவுக்கு மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயத்தில் இருந்த பிரச்சனைக்காக ஓபன் சர்ஜரி செய்யப்பட்டு ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருந்ததுi. இதன் காரணமாக வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு மார்ச் 26 ஆம் தேதி தயிர் என ஏற்பட்ட மாரடைப்பு இவருடைய உயிரை பறித்தது. கீழே மயங்கி விழுந்த இவரை அவசர அவசரமாக குடும்பத்தினர் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
 

தேடி வந்த குஷி பட வாய்ப்பு

இவருடைய தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில், மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா மிஸ் பண்ணிய இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான 'குஷி' திரைப்படம். இயக்குனர் எஸ் ஜே சூர்யா தளபதியிடம் கதையை சொல்வதற்கு முன்பு, மனோஜ் பாரதிராஜாவிடம் இந்த கதையை கூறியுள்ளார். ஆனால் அப்போது அவர் வேறு சில படங்களில் பிஸியாக நடித்ததால் ஷெட்யூல் பிரச்சினை காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

சேதுராமன் முதல் மனோஜ் பாரதிராஜா வரை; இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!
 

கற்றது தமிழ் வாய்ப்பை மிஸ் பண்ணிய மனோஜ்

 இந்தத் திரைப்படம் தளபதி விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து இயக்குனர் 'ராம்' இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மனோஜ்க்கு வந்துள்ளது. ஒரு சில காரணங்களால் இந்த படத்திலும் இவரால் நடிக்க முடியாமல் போக, இந்த திரைப்படமும் தற்போது வரை பேசப்படும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த இரு படங்களை அவர் மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இடத்தை பிடித்த பிரபலமாக இருந்திருப்பார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

vuukle one pixel image
click me!