2-ஆவது நாளில் முதல் நாளை விட 3 மடங்கு வசூலை அள்ளிய 'வீர தீர சூரன்' !
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில், 2012-ஆம் ஆண்டு வெளியான 'ஐ' படத்திற்கு பின்னர் வெளியான எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகமாக வெளியான, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும், இது ஒரு மல்டி ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது.
எனவே தன்னை ஒரு தனி ஹீரோவாக நிலைநிறுத்தி கொள்ள, பல வருடங்களாகவே விக்ரம் போராடி வந்தார். இவர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான, இருமுகன், கோப்ரா, தங்கலான் போன்ற படங்கள் கூட அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான தங்கலான் படத்திற்ல் விக்ரம் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டாலும், பா.ரஞ்சித் இந்த படத்தின் கதையை கொண்டு சென்ற விதமே படத்தின் தோல்விக்கு வழிவகுத்ததாக பார்க்கப்பட்டது.
லேட்டா ரிலீஸ் ஆனாலும் வசூலில் எம்புரானை ஓவர்டேக் செய்த வீர தீர சூரன் பாகம் 2!
இதைத் தொடர்ந்து, தற்போது விக்ரம் இயக்குனர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் 'வீர தீர சூரன்' பார்ட் 2. இந்த படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே இரண்டாவது பாகத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பல பிரச்சனைகளை கடந்து மார்ச் 27ஆம் தேதி, மாலை 6:00 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முதல் நாளில் இருந்தே, 'வீர தீர சூரன்' 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வசூலும் அதிகரித்துள்ளது. அதன்படி 'வீர தீர சூரன்' பார்ட் 2 திரைப்படம், தமிழகத்தில் மட்டுமே இதுவரை சுமார் ரூ.350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன் 2' சூப்பரா? சுமாரா? ட்விட்டர் விமர்சனம்!
இப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, 'வீர தீர சூரன்' திரைப்படம் முதல் நாளை விட மூன்று மடங்கு பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்துள்ளதாம். முதல் நாளில் மாலை 6 மணி மற்றும் 10 மணி காட்சிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் மொத்தம் 4 காட்சிகள் போடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2-ஆவது நாளில், 'வீர தீர சூரன்' திரைப்படம் உலக அளவில் சுமார் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மற்றும் நாளை (சனி மற்றும் ஞாயிறு) விடுமுறை நாள் என்பதாலும், படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும் வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பட குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Breaking: 'வீர தீர சூரன்' படத்திற்கான தடை நீக்கம்; 6 மணிக்கு ரிலீஸ் உறுதி!